10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலை தூக்கும் அம்மை..!
மதுரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற சூழல் மற்றும் காய்ச்சல் வாயிலாக அம்மை வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மை நோய்க்கான தடுப்பூசி நிறுத்தப்பட்டு தற்போது வரை எம்.ஆர்.தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அம்மை நோயின் தாக்கம் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி உள்ளது.
மதுரையில் 10 குழந்தைகளும் பிற மாவட்டங்களில் 5 முதல் 7 குழந்தைகள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தூய்மையை கடைப்பிடித்தால் நோய் பரவுவதை எளிதில் தடுக்கலாம் எனவும் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





