இரவு நேரத்தில் உலா வரும் கரடிகளால் மக்கள் அச்சம்..!
கோத்தகிரி அருகே இரவு நேரங்களில் குட்டிகளுடன் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சுமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கிராமத்தில் நேற்று இரவு இரண்டு கரடிகள் குட்டிகளுடன் உலா வந்ததாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் சுற்றித் துறையும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அந்த பகுதியினர் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





