சாதி பெயரை கூறி திட்டிய தலைமை காவலர்..!
ஈரோடு மாவட்டத்தில் சாதி பெயரை கூறி இழிவாக பேசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் என்பவர் விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்று ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பாக பிரச்சனை செய்துள்ளார்.
செல்போன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எதிர்தரப்பில் பேசிய தலைமை காவலர் சிவக்குமார் செல்போனை கிருஷ்ணகுமாரிடம் கொடுக்குமாறு கோரி அவரை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை எடுத்து தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





