--- --:--:-- --

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்.. தவறான சிகிச்சை அளித்த சித்த மருத்துவர்..!

10

மதுரை அருகே முழங்கால் வலிக்கு வர்மா சிகிச்சை பெற்று வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தில் போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியை சேர்ந்த ராஜகாளி என்பவர் மதுரை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

 

அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டதை எடுத்து அதே பகுதியில் உள்ள சித்த மருத்துவமனையிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே முழங்கால் வலிக்கு சிகிச்சை அளிக்கும் போது ராஜபாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கணவருக்கு சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் விசாரணை நடத்திய பொழுது சிவசுப்பிரமணி முறையாக சித்த மருத்துவம் படிக்காமல் சிகிச்சை செய்து வந்ததும் தெரிய வந்தது. அதனையடுத்து சிவசுப்பிரமணியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon