சாலை விபத்தில் சிக்கிய பசு மாடு..இறங்கி மீட்ட அமைச்சர் நாசர்..!
சென்னை ஆவடி அருகே சாலை விபத்தில் சிக்கிய பசுமாட்டை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் சுற்ற வட்டாரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயிலில் காவல் நிலையம் அருகே பசு மாடு ஒன்று விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தது.
அதனை கண்ட அமைச்சர் உடனடியாக காரை நிறுத்தி கால்நடை மருத்துவரை நிகழ்விடத்திற்கு வரவழைத்தார். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் பசுவின் உடன் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அந்த வழியாக சென்ற வாகனத்தில் பசுமாட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





