--- --:--:-- --

10ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி பலி..!

1.1

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடு திரும்பிய மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் அடுத்த முருங்கம்பாளையம் அருகே எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவரின் மகள் தன்ஷிகா. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில் தேர்வு எழுதி விட்டு வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் தனது தந்தையை அழைத்து செல்ல இருசக்கர வாகனத்தில் மாணவி சென்றுள்ளார். வஞ்சிபாளையம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

 

இதில் தன்ஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon