கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு..!
தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
கும்பக்கரை அருவியில் குளித்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் அருவியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அருவியின் இரு பகுதியிலும் பிரித்து பாதுகாப்பாக நிறுத்தி வெள்ளம் பெருக்கு சீரானதும் அருவியின் மறுபக்கம் இருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்து அவரவர் ஊர்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இத்தகவல் அறிந்த தேவதானப்பட்டி வனச்சரகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் அதிகப்படியான வன ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினர். மேலும் கும்பக்கரை அருவிப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு சில நபர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். வதந்தியை நம்ப வேண்டாம் என வனச்சரகர் டேவிட் ராஜன் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து வெள்ளப்பெருக்கு சமயத்தில் அருவியில் இருந்த சுற்றுலா பயணி ஷியாம் வர்மன் கூறுகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என சுற்றுலா பயணிகளுக்கு வன ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் வனத்துறை ஊழியர்கள் செயல்பட்டனர். உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கும், தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜனுக்கும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




