--- --:--:-- --

19 வயது இளம்பெண் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம்..!

9

சேலத்தில் திருமணம் ஆகாத 19 வயது பெண் கர்ப்பமான நிலையில் கருவை கலைக்கும் நோக்கில் பிரசவம் பார்த்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

 

இந்நிலையில் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவம் மூலம் குழந்தையை வெளியே எடுத்து பெண்ணை அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பெண்ணுக்கு பிரசவ சிகிச்சை பார்த்த மருத்துவர் குழந்தை இறந்து பிறந்ததாகவும் பெண்ணை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும் வற்புறுத்தியுள்ளனர்.

 

பெண்ணை மீட்ட பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon