--- --:--:-- --

பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு..!

8

விழுப்புரம் அருகே பங்குனி உத்திர திருவிழாவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 3ஆம் தேதி மயிலத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்ற நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இளைஞரின் தாய் எழுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில் கொல்லியங்குளம் மேற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருவிழாவின் பொழுது ஏற்பட்ட தகராறு கோகுல்ராஜ் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரமேஷை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon