ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு..!

பரிமலை சன்னிதானத்திற்குள் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் போன்றவர்களின் போஸ்டர்களை எடுத்துச் செல்ல பக்தர்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேனர்களை கோவிலுக்குள் கொண்டு வந்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

 

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிபாடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் கோவிலில் நடைமுறை பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இனிவரும் காலங்களில் ஐயப்ப பக்தர்கள் பேனர் மற்றும் போஸ்டர்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.