--- --:--:-- --

ஏடிஎம்மில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டு..!

7

கடலூர் அருகே தனியார் ஏடிஎம்மில் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள தனியார் ஏடிஎம் ஒன்றில் மணிவேல் என்பவர் 300 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

 

அதில் 200 ரூபாய் நோட்டு எரிந்து போன நிலையில் இருந்துள்ளது. இந்த ரூபாயை அருகில் இருந்த வங்கிகளில் மாற்ற முயன்ற நிலையில் தங்கள் வங்கி ஏடிஎம்மில் எடுத்திருந்தால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon