--- --:--:-- --

பறவை உடல் மற்றும் டைனோசர் தலை கொண்ட வினோத உயிரினம்..!

5

காலம் காலமாக மனிதனின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் டைனோசரை பற்றி புதிய சுவாரசியங்களும் வெளிவந்து கொண்டே தான் உள்ளன. தற்பொழுது அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பறவை உடல் மற்றும் டைனோசர் தலை கொண்ட வினோத உயிரினத்தின் தொல்பொருள் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்த உயிரினம் அகலமான தோள் மற்றும் நீண்ட நகங்கள் கொண்ட ஒரு உயர் ரக கோழி போல் இருந்தாலும் இதன் மண்டை ஓடு பீனிக்ஸ் வகை டைனோசர்களோடு ஒத்து போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விரிவான ஆராய்ச்சியில் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த உயிரினம் பறவைகளை விட டைனோசர்களின் உடல் அமைப்போடு ஒத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த பறவை டைனோசரின் பரிணாம வளர்ச்சியின் உருவாக இருக்கலாம் என கூறும் விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் தொடர்ச்சியாக அனைத்து உயிரினங்களுக்கும் பரிமாண வளர்ச்சி சாத்தியமாகும் என மேம்பட்ட ஆராய்ச்சி எடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon