--- --:--:-- --

தாராபுரம் ரோடு ஷோவில் முதலமைச்சர் விஜய் பேச்சு!

2

என்னை பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசுங்கள், எங்கள் சகோதரிகளை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று தாராபுரம் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்கிறார். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ரோடு ஷோ சென்று வருகிறார்.

 

உடுமலை ரவுண்டானா, 5 கார்னர், மீனாட்சி புரம், கொளத்துப்பாளையம் வழியாக அமராவதி ரவுண்டானா, புதுச்சந்திராபுரம், சத்திரம், தளவாய்பட்டினம் என சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் சென்றடைந்தார். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் மக்களுக்கு எனது வணக்கம். இரண்டாவது முறையாக தாராபுரம் நான் வந்துள்ளேன். மதுரங்கம் மக்களே பார்த்து பேசினது அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அதே மாதிரி தான் நம்ம தாராபுரம் சொந்தங்களையும் தாராபுரம் சொந்தங்களையும் இன்னைக்கு நான் பார்க்க வந்திருக்கிறேன்.

 

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரும் ஆள் நான் இல்லை. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது பெண்களை அவதூறாக பேசுபவர்களை ஆதரிப்பது போன்றது. ஸ்டாலின் சார் இங்கே வந்து என்ன பேசிட்டு சென்றார்கள். அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தாராபுரத்திற்கு வந்து தயவு செய்து திமுக வாக்களிக்க வேண்டாம் என இப்போவே சொல்லி சென்றுள்ளனர்.

 

 

சகோதரி சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதை காது கொடுத்து கேட்க முடியாது. மறப்பது மாதிரியா பேசிட்டு போயுள்ளார். அவர் மட்டுமல்ல, அவர் வளர்த்துள்ளதும் அப்படி தான் பேசியுள்ளனர். என்னை பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசுங்கள், எங்கள் சகோதரிகளை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இது இன்று நேற்று நடக்கும் கூத்து அல்ல. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடக்கிறது” என்று பேசினார். இதையடுத்து முதலமைச்சர் விஜய் மாட்டு வண்டியில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon