--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

2

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வடதமிழகம் மற்றும் வடகேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

 

.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் 50 கிலோ மீட்டர் வேக காற்றுடன் கன மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதே போல, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

சென்னையைப் பொருத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon