--- --:--:-- --

சசிகலா சிறை சென்றவர் என்பதால் அவருக்கு சலுகை கிடையாது..!

10

The Prime Minister, Shri Narendra Modi pays tributes to the mortal remains of Ms. J. Jayalalithaa, in Chennai on December 06, 2016.

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு உள்ளதால் வருமானவரி தண்டத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 1994, 1995 ஆம் ஆண்டில் வருமானத்தைக் குறைத்து காட்டியதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது.

 

மேலும் வருமானத்தைக் குறைத்து காட்டிய புகாரில் 2002ஆம் ஆண்டு சசிகலாவுக்கு 40 லட்சம் ரூபாய் செலுத்த வருமான வரித் துறை உத்தரவிட்டது. வருமான வரித்துறையின் இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

 

இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதால் தனக்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிதண்டிக் கப்பட்டு உள்ளார். எனவே அவருக்கு வருமான வரித் தண்டத்தை கைவிடும் சுற்றறிக்கை சசிகலாவுக்கு பொருந்தாது என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon