--- --:--:-- --

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது..!

11

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில், வான், தரை வழியாக, நீர் வழியாகவும் அனைத்து போக்குவரத்துக்கும் தடையின்றி இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon