தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்காக நட்சத்திர பிரச்சார நபர்கள்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பிரச்சார நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நடிகைகள் கவுதமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பிரச்சார நபர்களின் பட்டியலை பாஜகவின் அகில இந்திய தலைமை வெளியிட்டுள்ளது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி இராணி, கிஷன் ரெட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, இல கணேசன், துரைசாமி, கே டி ராகவன், நடிகைகள் கவுதமி, விஜயசாந்தி உள்ளிட்ட 30 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.






