கொரொனாவால் சீல் வைக்கப்பட்ட பள்ளியில் பயின்ற மேலும் ஒரு மாணவிக்கு கொரொனா..!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே 56 மாணவிகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாணவிக்கு கண்டறியப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிக்கு முதலில் கொரொனா உறுதியானதை அடுத்து அங்கு உள்ளவர்களுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆசிரியை உட்பட மாணவிகள் 56 பேர் மற்றும் மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கும் தொற்று உறுதியானதையடுத்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஒரு மாணவி மற்றும் பெற்றோர் இரண்டு பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.






