--- --:--:-- --

கொரொனா இரண்டாவது அலையை தடுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..!

2

நாட்டில் கொரொனா இரண்டாவது அலையை தடுக்க உடனடியாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

தினசரி கொரொனா பாதிப்பை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் நாட்டின் பல மாவட்டங்களில் கொரொனா கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் இது இந்த அளவோடு கட்டுப்படுத்தாவிட்டால் தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

 

எனவே உடனடியாக உறுதியான நடவடிக்கைகள் தற்போது அவசியமாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரொனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி சிகிச்சைகளை மேற்கொள்வது, தடுப்பூசிகளை அதிகளவில் போடுவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்களை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

 

அரசுக்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்த பிரதமர் குணமடைந்தவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் இந்தியாவில் தான் அதிகம் என தெரிவித்தார்.

 

இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon