இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய முரசு புயல், நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையே இன்று கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் நாளை மிதமான மழை பெய்யும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
கனமழை காரணமாக கடலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடலூர், ரெட்டிசாவடி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்துவரும் நிலையில் கடலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





