--- --:--:-- --

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா..!

4

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான பி.கே.சின்ஹா மத்திய அரசின் மின்துறை செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

 

ஜூன் 2015 இல் பி.கே.சின்ஹா அமைச்சரவை செயலாளராக பரிந்துரைக்கப்பட்டார். ஜூன் 2019இல் அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் நீண்ட காலம் அமைச்சரவையை செயலாளராக இருந்தார்.

 

செப்டம்பர் 2019 இல் ஓய்வு பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார். பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பணியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிமானமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon