நாளை முதல் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது.இது ஆந்திர பிரதேசம், ஏனாம் கடற்கரை பகுதி, பாபட்லா, மற்றும் விசாகப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
அதேபோல் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். அதேநேரம் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும்.” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி ஏனாம் பள்ளிகளுக்கு நாளை (27 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏனாம் பிராந்தியத்தை புயல் கடக்க கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி 27, 28 ஆகிய இரண்டு தினங்கள் ஏனாமில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





