--- --:--:-- --

தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு.!

1

மிழ்நாட்டில் நாள்தோறும் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று மட்டும் 244 பேருக்கு புதிதாகப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

நடப்பாண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 16,577 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனியாகக் காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை உடனுக்குடன் சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் பார்க்காமல், உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

இதனிடையே, திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் போதிலும், இதுவரை டெங்கு பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 50 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon