மதுரையில் அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் சிக்கிய 175 கோடி..!
மதுரையில் அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள் வெற்றி என்பவர் கட்டுமான முறை பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நூறு ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் 75 கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் தற்போது கணக்கில் வராத 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளன.
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருந்ததாக கிடைத்த தகவையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.அரசு ஒப்பந்ததாரர் வெற்றி அமமுக மதுரை தெற்கு மண்டல செயலாளர் மகேந்திரனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.






