--- --:--:-- --

தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!

12

மிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா தியேட்டர்கள் பத்தாம் தேதி முதல் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தி தியேட்டர்கள் இயங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

 

அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா நிலவரம் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon