அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி..!
உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக ஒரு லட்சத்து 233 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 926 பேர் கொரொனாவால் இறந்ததால் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து கடந்தது.






