பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..!
குஜராத் மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார். நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர் பாரதியார் பாடலின் முதல் 8 வரிகளை தமிழிலேயே கூறினார்.
பின்னர் இந்த பாடல் வரிகளுக்கான அர்த்தத்தை அவர் ஹிந்தியிலும் மொழிபெயர்த்து கூறினார். உலகின் மிகப் பழமையான மொழியான தமிழை புகழ்ந்து பாரதி எழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைப்போன்றே சுதந்திர தின விழாவின் போதும் பாரதியாரின் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.






