--- --:--:-- --

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் சீனா பெரும் அதிர்ச்சி..!

3

ந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி இந்தியாவின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்படும் ‘மகாசாகர்’ (MAHASAGAR) மிஷன் மற்றும் அதன் 5 முக்கிய உத்திகள் குறித்து பார்க்கலாம். மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

இந்தியப் பெருங்கடலில் முத்து போன்ற வடிவத்தில் அமைந்துள்ள இலங்கை, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியப் புள்ளியாக விளங்குவதோடு, இந்தியாவின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட காலமாகவே இலங்கைக்கான பொருளாதார உதவிகள் என்ற பெயரில், கடன் வலையை விரித்து சீன ஆராய்ச்சி மற்றும் உளவுக்கப்பல்களை அங்கு அனுப்பி இந்தியாவைச் சீனா உளவு பார்த்து வந்தது. சீனாவால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா நிபந்தனையற்ற உதவிகளை வழங்கியது.

 

 

தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் ‘மகாசாகர்’ (MAHASAGAR – Mutual and Holistic Advancement for Security and Growth for All in the Region) தொலைநோக்கு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்பு சென்று இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பின்வரும் 5 நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

 

நிகழ்நேரக் கண்காணிப்பு (Real-Time Tracking): சீனக் கப்பல்கள் ஆய்வு என்ற பெயரில் உளவு பார்ப்பதைத் தடுக்க, இந்தியா – இலங்கை இணைந்து புதிய அதிநவீன கண்காணிப்பு அமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் இரு நாடுகளின் கடற்படைகளும் கடலில் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும். இதனால் உளவுக்கப்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல்சார் பயங்கரவாதம் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon