--- --:--:-- --

11 மாத குழந்தையை 5 வயது சிறுமி கொன்றதற்கான காரணம் பாசப் போராட்டம் தானா..!

7

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்க்க சாசனம் கிராமத்தை சேர்ந்த காவியாவிற்கு ஐந்து வயது நிர்மலா, 11 மாதமான ஹேமஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள். வீட்டில் இருந்த ஹேமஸ்ரீ காணாமல் போனதால் பெற்றோர் தேடுகின்றனர்.

 

தத்தி தத்தி அடி எடுத்து வைக்கும் குழந்தை தண்ணீர் தொட்டியில் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீஸ் விசாரித்த பிறகே காவியாவின் 5 வயது குழந்தை நிர்மலா தான் கொலையாளி என தெரியவந்தது. கைக் குழந்தையோடு தாய் அதிக நேரம் செலவிட்டு கொள்வதை தாங்கிக் கொள்ள முடியாத பால் மனம் மாறாத சிறுமியை கொலை செய்யத் தூண்டியுள்ளது.

 

தனக்கு கிடைக்கவேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு தடை படுகிறது என்ற ஆத்திரமும் கோபமும் மூத்த குழந்தைகளை இது போன்ற சூழலுக்குத் தள்ளுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon