10 ஜெல்லி டொனாட்களை விழுங்கி கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்..!
இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூன்று நிமிடங்களில் 10 ஜெல்லி டொனாட்களை விழுங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். போமிங்காமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.
லியாஷட்கவர் என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் ஜெல்லி டொனாட்டை விழுங்கி முடித்ததும் வாயைத் திறந்து காட்டிய பின்னர் அடுத்ததை விழுந்த தொடங்கினார். ஒவ்வொரு ஜெல்லி டொனாட்டையும் விழுங்குவதற்கு சராசரியாக 30 வினாடிகள் தேவைப்பட்டது.
பின்னர் பேசிய அந்த பெண் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பத்து கின்னஸ் சாதனைகளை படைக்க விரும்புவதாக தெரிவித்தார்.






