--- --:--:-- --

நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கான பணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

7

20,000 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கான பணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜேஸ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ எம் கண்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுற்றுச்சூழல் அனுமதி குழு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் மனுவில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த வழக்கை சில நாட்களுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். அதுவரை நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கான கள பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்யட்டும் அதற்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

 

ஆனால் அதற்காக பணிகளை நிறுத்த இயலாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கான பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon