--- --:--:-- --

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு..!

5

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பயணிகள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, ஆம்னி பேருதுகள் கட்டணத்தை தாறுமாறாக, 5 மடங்கு வரை உயர்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்கான செல்போன் எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

 

மேலும், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கும், விதிகளை மீறி வரி செலுத்தாமல், உரிய பெர்மிட் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், கட்டண உயர்வுக்கு அபராதம் விதிப்பது தீர்வாக இருக்காது என தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கு புதிய உரிமம் வழங்கவும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon