--- --:--:-- --

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? – மு.க.ஸ்டாலின்

1

இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

 

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.

 

இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன. பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மொத்த இறக்குமதி வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியால் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டின் செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 37 ஆயிரத்து 762 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய GST, 45 ஆயிரத்து 363 கோடி ரூபாய் மாநில GST, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 396 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த IGST என மொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 521 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

 

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என தொடர்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடியை கடந்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் ஜிஎஸ்டி வசூல் 15 சதவீதம் அதிகரித்து, 25,973 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், கர்நாடகாவின் ஜிஎஸ்டி வசூல் 16 சதவீத வளர்ச்சியுடன் 13,884 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 17 சதவீத வளர்ச்சி கண்டு 12,222 கோடி ரூபாயுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon