--- --:--:-- --

10 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!

8

தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களை வருகிற 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ‌பி சாகி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி தஞ்சை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை வருகிற 22 முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வழக்கறிஞர்கள் காணொளி மூலம் வழக்கில் ஆஜராகவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த மாவட்டங்களில் உள்ள அரக்கோணம், ஸ்ரீரங்கம், வள்ளியூர், ஆலங்குளம், வேலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

 

இங்கு தற்போதுள்ள காணொளி நடைமுறையை தொடரவேண்டும் எனவும் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 19 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon