தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும்!
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கடலோர தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதுடன், உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 6-ஆம் தேதி வரையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் நான்காம் தேதி வரையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை வரும் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 13ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 12 ஆம் தேதி வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





