--- --:--:-- --

மதுராந்தகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் பரப்புரை..!

6

மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் பம்பரமாய் சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். களத்தில் ஐந்து முனை போட்டி நிலவுவதால் பரப்புரை களம் சூடுபிடித்துள்ளது.

 

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வாக்கு திரட்டவுள்ளார். இதற்காக சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, சென்னையில் இருந்து செல்லும்போது மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் நினைவிடம் மற்றும் ஆதிபராசக்தி கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், தாராபுரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கவுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon