மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி படம் வழங்கி த.வெ.க-வினர் வரவேற்பு!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு, வழியெங்கும் த.வெ.க தொண்டர்கள் கொடிகளை ஏந்திப் பேராரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கரங்களால் விஜய்க்குத் தமிழக வெற்றிக் கழகக் கொடி வழங்கப்படுவது போன்ற அரிய புகைப்படப் பரிசு மற்றும் ‘வேல்’ ஆகியவை அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மேலும், மேல்மருவத்தூர் செல்லும் வழியில் அவருக்கு ‘ஓம் சக்தி ஆதிபராசக்தி’ திருவுருவப் படமும் பரிசளிக்கப்பட்ட நிலையில், தொண்டர்களின் எல்லையற்ற உற்சாகத்திற்கு இடையே பிரசார வாகனம் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




