--- --:--:-- --

மதுராந்தகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

10

மதுராந்தகம் தொகுதியில் இன்று நடைபெறும் விஜயின் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையால் ஏராளமான பொதுமக்கள் திரள வாய்ப்புள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

 

புக் துறை, படாளம், மதுராந்தகம் புறவழிச்சாலை, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், செம்பூண்டி, பசுவங்கரணை, ராமாபுரம், பொற்பனங்கரணை, எலப்பாக்கம், ஆனைக்குன்னம், கீழ் அத்திவாக்கம், கடமலைபுத்தூர், பெரும்பேர்கண்டிகை மற்றும் தேன்பாக்கம் உள்ளிட்ட 39 இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon