சுறாவின் வாலில் இறுக்கப்பட்ட நைலான் கயிறு! காப்பாற்ற முயற்சித்த நீச்சல் வீரர்!
தாய்லாந்தில் திமிங்கல சுறாவின் வால் பகுதியை சுறுக்கிட்டுள்ள நைலான் கயிறை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நீச்சல் வீரரின் வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு சீனக் கடற்பரப்பில் வால் பகுதியில் சிக்கியுள்ள நைலான் கயிறால் நீந்த சிரமப்பட்ட திமிங்கல சுறாவை கண்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அதைக் காப்பாற்றும் நோக்கில் கத்தியால் கயிறை அறுக்க முற்பட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மீனின் வாலில் கத்தி பாய்ந்ததால் அது வலி தாங்க முடியாமல் விலகிச் சென்றது. ஆழமான வெட்டு காயம் அதன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் கடலில் வரும் அந்த சுறாவை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.






