--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தல்!

11

பெட்ரோல் டீசல் விலையை குறைத்து கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாவது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதியிருக்கும் கடிதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க வேண்டுமே தவிர அவர்கள் மீது சுமையை அதிகரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த நிலையில் அதன் பலனை அரசே எடுத்துக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ள சோனியா காந்தி கடந்த ஆறு ஆண்டுகளில் கலால் வரி மூலம் 18 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வருவாய் ஈட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார் .

 

சுயசார்பு முழக்கத்தை முன்னெடுக்கும் அரசு மக்களை பொருளாதாரத் துன்பத்துக்கு ஆளாக்காமல் பெட்ரோல். டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சோனியா அவதியுறும் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon