உலகளவில் 170 கோடி பேருக்கு கொரோனா வர வாய்ப்பு…!
உலக மக்கள்தொகையில் 170 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை சேர்ந்த school of hygiene and tropical medicine என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகளவில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நீரிழிவு, எச்ஐவி, நுரையீரல் பாதிப்பு, உடல் பருமன், இதய நோய் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 20 விழுக்காடு அதாவது 170 கோடி பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் 35 கோடி பேரின் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
20 வயதுக்குட்பட்டோரில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஒரு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், 70 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் இருவருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




