தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் மேல் ரயில் ஏறிய சம்பவம் வேதனை அளிப்பதாக மோடி டிவீட்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர். இதை அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மத்திய பிரதேசத்திலுள்ள தங்கள் ஊர்களுக்கு சென்று செல்ல முடிவெடுத்தனர்.

 

அதன்படி அங்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முசாவலுக்கு தண்டவாளத்தை ஒட்டியே நடந்து சென்று பின்னர் ரயிலில் ஊருக்கு செல்லலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர். ஜல்னாவிலிருந்து நடக்கத் தொடங்கிய தொழிலாளர்கள் 45 கிலோ மீட்டரை கடந்தபோது இருட்டியதால் தண்டவாளத்தில் படுத்து உறங்கினர்.

தொழிலாளர்கள் அதிகாலை நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஜல்னா ஔரங்காபாத் இடையே இயக்கப்பட்ட சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் ஔரங்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

]

இச்சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்ததாகவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் விசாரித்ததாகவும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசு கையாளும் விதத்தை எண்ணி நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

 

தண்டவாளத்தில் படுத்த 16 பேர் ரயிலேறி உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Leave a Reply