குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனை! வெற்றி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசியை குரங்குகள் மீது சீனா வெற்றிகரமாக பரிசோதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த சினோவா பயோடக் நிறுவனம் பிகுவக் என்ற கொரொனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஆய்வு நிலையில் உள்ள இந்த தடுப்பு மருந்தை சின்முக குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்து உள்ளனர்.

 

முடக்கப்பட்ட வைரசை குரங்குகளின் உடலில் செலுத்தி நோயெதிர்ப்பு புரதங்களை உருவாக செய்திருக்கின்றன. மூன்று வாரங்கள் கழித்து குரங்குகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட செய்து அதன் பிறகு அவற்றை பரிசோதித்து உள்ளனர்.

 

தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் இல்லை. தடுப்பு மருந்து கொடுக்கப் படாத குரங்குகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு தீவிர நிமோனியா பாதிப்பு இருக்கிறது. இதன் மூலம் குரங்குகள் மீது நடத்தப்பட்ட தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது இந்த தடுப்பு மருந்து மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சினோபப் நிறுவனத்தின் மற்ற தடுப்பு மருந்து மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply