ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை
திறக்க அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய மநீமா வழக்கு தொடர்ந்தது. எனவே உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் மது கடைகளை திறக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை என வழக்கு பிறப்பிக்கப் பட்டதால் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது.


Leave a Reply