திரிபுரா இளைஞர் சமூக இடைவெளியுடன் உருவாக்கியுள்ள பைக்!

ஊரடங்கால் நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஓய்வு நேரமாக கருதாமல் சில இளைஞர்கள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரிபுரா மாநில இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள கோவிட் -19 பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரொனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் வீரியத்தை குறைக்க நாடு முழுவதும் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனாவின் வீரியம் குறைந்து ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் இன்னும் சில காலம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என கருதுகின்றனர் ஆய்வாளர்கள். அந்த வகையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் புதிய இருசக்கர வாகனத்தை உருவாக்கி இருக்கிறார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பார்த்தா என்ற இளைஞர். திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த இளைஞர் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பட்டறை வைத்திருக்கிறார்.

 

ஊரடங்கை ஓய்வு நேரமாக கருதாமல் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் கோவிட் -19 பைக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பழைய இரும்பு கடையில் பழுதான இருசக்கர வாகனத்தை வாங்கியவர் பின்னர் அதை இரண்டாகப் பிரித்து ஒரு மீட்டர் நீள குழாயுடன் இணைத்து இரு கைகளையும் கால்களையும் அமைத்துள்ளார்.

 

அத்துடன் 450 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தி பேட்டரியை இணைத்து இந்த புதிய பைக்கை உருவாக்கி அதற்கு கோவிட் -19 பைக் என பெயரிட்டிருக்கிறார். பார்த்தா உருவாக்கியுள்ள இந்த இரு சக்கர வாகனத்தை மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் அதன் மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

 

குறைந்த செலவில் பார்த்தா உருவாக்கிய கோவிட் -19 பைக் சாலையில் இயக்க எளிமையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இரு சக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல் திரிபுரா மாநில முதலமைச்சர் பாராட்டையும் பெற்றுள்ளது.


Leave a Reply