கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் ஆலையிலேயே கொரோனா! அதிர்ச்சி!
குஜராத்தில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் தயாரிக்கும் ஆலையில் 26 பேருக்கு கொரொனா உள்ளதால் அந்த ஆலை மூடப்பட்டது. மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கொரொனாவுக்கு மருந்தாக பயன்படுவதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதையடுத்து பல நாடுகளுக்கும் இந்த மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்த மாத்திரைகளை அதிக அளவில் தயாரிக்கும் கடிலா மருந்து நிறுவனத்திற்கு அகமதாபாத்தின் தோல்கா எனும் இடத்தில் ஆலை உள்ளது.
இந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரொனா உள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் ஆலை மூடப்பட்டு உள்ளதாகவும் அதை சுற்றிய பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரொனாவை ஒழிக்க மாத்திரை தயாரிக்கும் ஆலைகளில் 26 பேருக்கு கொரொனா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






