--- --:--:-- --

9 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

10

சென்னையை அடுத்த புழலில் ஒன்பது மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

 

தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளநிலையில் செல்வராஜ் போதிய வருமானம் இன்றி இருந்ததால் சரண்யாவுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சரண்யா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon