ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா…! சென்னையில் உயரும் நோயாளிகள் எண்ணிக்கை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


தமிழகத்தில் இன்று புதிதாக 104 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 94 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக இருந்தது.

 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. 1210 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் 2 பேர் பலியாக, மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 94 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


Leave a Reply