--- --:--:-- --

அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

3

இயல் இசை நாடக மன்றம் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார் செய்துள்ளது.சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இயல், இசை, நாடகம் மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுங்கள். அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என ஒருவர் பேசினார். ரூ.500 கோடி கொடுத்தாலும் பொருத்தமில்லாதவருக்கு முதலமைச்சர் பொறுப்பு தரமாட்டார். பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமிக்குத்தான் ஒரு ரூபாய் கூட வாங்காமல் முதலமைச்சர் கொடுக்கச் சொல்லியுள்ளார் என நான் சொல்லி அனுப்பினேன்.” என்று பேசியிருந்தார்.

 

 

இந்த விவகாரம் பெரிய பரபரப்பான நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக கூறிய நபர் குறித்தும், அமைச்சர் ராஜ்மோகனிடம் கூறிய லயோலா மணியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என திமுக வழக்கறிஞர் பரந்தாமன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon