குமாரசாமியின் மகன் திருமணம்! ஊரடங்கு விதி மீறல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகள் திருமண நிகழ்ச்சியில் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிவது போன்ற ஊரடங்கின் பின்பற்றவேண்டிய அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 

குமாரசாமியின் மகன் நிகிலுக்கும் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பெண் ரேவதிக்கும் கிடதி அருகே இதை கேதகன அள்ளி என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மணமக்களுடன் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்ட அனைவருமே தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அதேபோல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிய வில்லை. முன்னதாக நிகில் ரேவதி திருமணத்தை ஜன பாடல் ஓகே என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு ஊரடங்கு காரணமாக குமாரசாமியின் பண்னை இல்லத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.


Leave a Reply